3 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக பாதையில் குருந்துகஹ ஹெதக்ம நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ள வாகனங்கனை பழுதுபார்க்கும் நிலையத்திற்கு அருகாமையில் இந்த ஹெரோயின் போதை பொருள் இருந்ததாகவும், இதனை பொலிஸ் போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் மீட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.