அமெரிக்கா – வடகொரியா பேச்சுவார்த்தை தொடரவேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது. இருநாடுகளுக்குமிடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து வடகொரியா வழிநடத்தல் ஆயுதமொன்றை பரிசோதித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா இராஜாங்க செயலாளர் மைக்போம்பியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியாதெனவும் வடகொரியா அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை தணிப்பது அவசியமென சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங் குறிப்பிட்டுள்ளார். வடக்கு ஆசிய நாடுகளின் நலனும் அதில் தங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.