fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தந்திரோபாய வழிகாட்டல் ஆயுதமொன்றை சோதனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 18, 2019 12:03

தந்திரோபாய வழிகாட்டல் ஆயுதமொன்றை சோதனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவிப்பு

தந்திரோபாய வழிகாட்டல் ஆயுதமொன்றை சோதனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. புதிய வகையான ஆயுதங்கள் பட்டியலில் அது உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த ஆயுதம் தொடர்பில் ஒரு சில தகவல்கள் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளன. எனினும் சோதனை செய்யப்பட்ட தந்திரோபாய வழிகாட்டல் ஆயுதம் சக்திவாய்ந்த யுத்த ஆயுதங்களுடன் இணைக்கப்படுமென வடகொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியுடன் இரண்டாவது முறையாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் முதற்தடவையாக வடகொரியா ஆயுதமொன்றை சோதனை செய்துள்ளது. குறித்த சந்திப்பு எந்தவொரு இணக்கப்பாடுமின்றி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 18, 2019 12:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க