வடபகுதியின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவி வழங்கப்போவதாக கனடாவும் ஈரானும் உறுதியளித்துள்ளது.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்த்தானிகர் டேவிட் மெக்கினட் இலங்கைக்கான ஈரான் தூதுவர் மொஹமட் சாரி அல் அம்ரானி ஆகியோர். வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை கொழும்பில் சந்தித்தனர். வடக்கில் இடம்பெறும் அபிவிருத்தி பணிகளுக்கு தொடர்ந்தும் தமது அரசாங்கம் ஆதரவு வழங்குமென கனேடிய உயர்ஸ்த்தானிகர் அங்கு தெரிவித்தார். வடமாகாண குடிநீர் திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்போவதாக ஈரான் தூதுவர் உறுதியளித்துள்ளார்.