fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையில் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி : நிதி அமைச்சர்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 17, 2019 19:22

இலங்கையில் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி : நிதி அமைச்சர்

இலங்கையில் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நிவ்யோர்க் நகர ஐ.நா பொருளாதார மற்றும் சமூக பேரவையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக சுமார் ஒரு இலட்சம் இளம் கைத்தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு மத்தியில் நிலையான அபிவிருத்தியை நோக்காக கொண்டு இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் தற்போதய சவால்களுக்கு மத்தியில் பலமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சர்வதேச உதவியை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

யுனிசெப் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹென்ரி ஏட்ரா எச்போரேயும் சந்தித்து பேச்சுவாரத்தை நடத்தியுள்ளார். இதேநேரம் இரான் விக்கிரம ரத்னவும் அமெரிக்காவின் வொசிங்கடனில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார். இலங்கை எட்டியுள்ள பொருளாதார அபிவி;ருத்தி தொடர்பாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். இதில் கலந்துகொண்ட அரச பிரதிநிதிகள் உலக வங்கியுடன் ஒப்பந்தமொன்றிலும் கைச்சாத்திட்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 17, 2019 19:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க