fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நோட்ரே டெம் தேவாலயத்தை மீள கட்டியெழுப்பபடும் : பிரான்ஸ் ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 17, 2019 12:43

நோட்ரே டெம் தேவாலயத்தை மீள கட்டியெழுப்பபடும் : பிரான்ஸ் ஜனாதிபதி

நோட்ரே டெம் தேவாலயத்தை மீள கட்டியெழுப்பபடுமென பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். 5 வருட காலப்பகுதிக்குள் புனரமைப்பு பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

எனினும் அதற்கு மேலதிகமான கால அவகாசம் தேவைப்படுமென விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தீ ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறியவதற்கென பிரத்தியேக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸின் 850 வருட பழைமையான நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து அங்கிருந்து மீட்கப்பட்ட அரிய கலைப்புகைப்படங்கள் அருகிலுள்ள லூவர் அருங்காட்சியகத்திற்கு மாற்றப்படவுள்ளதாக பிரான்ஸ் கலாசார அமைச்சு தெரிவித்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு பணியாளர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் ஐரோப்பிய கட்டிடக்கலையை பறைசாற்றும் வகையில் திகழ்ந்த மிகப்பழைமையான தேவாலயத்தின் அரிய கலை புகைப்படங்களையும் மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நோட்ரே டாம் தேவாலயம் மீள் புனரமைப்பு செய்யப்படும் வரை அரிய கலை புகைப்படங்கள், லூவர் அருங்காட்சியகத்திலேயே இருக்குமென பிரான்ஸ் கலாசார அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 17, 2019 12:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க