fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேலும் 7 மாதிரிக்கிராமங்களுக்கான நிர்மாண பணிகள் இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 17, 2019 12:26

மேலும் 7 மாதிரிக்கிராமங்களுக்கான நிர்மாண பணிகள் இன்று ஆரம்பம்

மேலும் 7 மாதிரிக்கிராமங்களுக்கான நிர்மாணப் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளன. அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இதுதொடர்பான நிகழ்வுகள் இடம்பெறும்.

ஹம்பாந்தோட்டை லுணுகம்வெஹர பிரதேச செயலாளர் பிரிவை கேந்திரமாக கொண்டு நிர்மாணப் பணிகள் இடம்பெறவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன் சூரிய தெரிவித்துள்ளார்.

தலா ஒரு கிராமத்தில் 25 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. 2015 ம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் மாதிரிக்கிராமங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 122 கிராமங்களுக்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஊடாக 53 ஆயிரத்து 721 குடும்பங்கள் நன்மையடையவுள்ளதாக வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 3 மாதங்களுக்குள் 2 ஆயிரத்து 500 மாதிரிக்கிராமங்களுக்கான நிர்மாணப்பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மற்றுமொறு வீடமைப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன் சூரிய தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 17, 2019 12:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க