ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை ஆரம்பம்
Related Articles
ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. தற்போது காணப்படும் நெருக்கடி நிலையை மாற்றி சுமூக சூழலை உருவாக்கும் நோக்கில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக கொள்கை காரணமாக பல்வேறு நாடுகளுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மறுசீரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் எதிர்கொள்ளக்கூடும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் பேச்சுவார்த்தையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. முதற்கட்ட பேச்சுவார்த்தையினூடாக இருதரப்பிற்கிடையிலான வர்த்தக கொடுக்கல், வாங்கல்களை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.