fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோத முறையில் மதுபான வர்த்தகத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 16, 2019 16:24

சட்டவிரோத முறையில் மதுபான வர்த்தகத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு

பண்டிகை காலத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான வர்த்தகத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 13ம், 14ம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகiளையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த அறிவிப்பை மீறி சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிவதற்கான விசேட சுற்றிவளைப்புக்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது கைதுசெய்யப்பட்ட சகலருக்கும் எதிராக அடுத்த வாரம் வழக்கு தொடரப்படுமென பிரதி கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 16, 2019 16:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க