Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சூறாவளியில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உட்பட 8 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 16, 2019 12:57

சூறாவளியில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உட்பட 8 பேர் பலி

அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ், எலபாமா, மிசிசிப்பி ஆகிய மாநிலங்களில் சூறாவளி தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. மணிக்கு 130 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியுள்ளது.

கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பாரிய சேதமேற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ள நிலையில் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாமென அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 16, 2019 12:57
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க