fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரான்சின் இதயம் தீக்கிரை (PHOTOS)

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 16, 2019 06:50

பிரான்சின் இதயம் தீக்கிரை (PHOTOS)

பிரான்சின் வரலாற்று சின்னமாக விளங்கும் நோற்றே டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் அதன் மேற்கூரை மற்றும் பிரதான ஊசி கோபுரம் இடிந்து விழுந்தது.

தீ விபத்து காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த ஏசு பிரானின் கிரீடம் உள்ளிட்ட திரு உருவச் சிலைக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 850 வருடங்கள் பழைமை வாய்ந்த இவ் தேவாலயத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தேவாலயத்தின் மேற் கூரை பற்றி எரிய ஆரம்பித்ததுடன் பரவிய தீ தேவாலயம் முழுவதையும் ஆக்கிரமித்ததுடன் அதன் மேற்கூரை இடிந்து விழுந்தது.

தீயை அணைப்பதற்காக சுமார் 500 க்கும் கூடுதலான தீயணைப்பு வீரர்கள் தொடரந்தும போராடி வருகின்றனர். இன்று அதிகாலை வரை தீயை கட்டுப்படுத்த முடிந்த போதிலும் தேவாலயத்திலிருந்து பராம்பரிய சின்னங்கள் சேதமடைந்துள்ளன.

இங்கிருந்த ஊசி கோபுரம் முற்றாக சேதமடைந்தன. ஐரோப்பியர்களின் கட்டிட கலைக்கு சிறந்த விளங்கிய இப்பழமையான தேவாலயம் தீக்கிரையானது அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 ம் உலகப் போருக்கு பின்னர் ஸ்தாபிகப்பட்ட 5வது மக்கள் குடியரசின் முதலாவது ஜனாதிபதியான ஜெனரல் ச்சாள்ஸ் டிகோள், முன்னாள் ஜனாதிபதிகளான ஜோஜ் பொம்பிடு மற்றும் பங்சுவா மித்ததோன் ஆகியோர் உயிரிழந்ததன் பின்னர் அவர்களது இறுதிக்கிரியைகள் கூட இவ்தேவாலயத்திலேயே இடம்பெற்றுள்ளன.

பிரான்சின் இதயமாக கருதப்படுகின்ற இத் தேவாலயம் பிரான்சின் கட்டிட கலைக்கு சான்று பகர்கின்றது. இத்தேவாலயத்திற்கு ஆண்டு தோறும் 13 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள் வழிபாடுகளில் ஈடுபடவென வருகை தருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 16, 2019 06:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo