fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாணிக்கல்லுடன் ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 15, 2019 13:27

மாணிக்கல்லுடன் ஒருவர் கைது

கொள்ளையிடப்பட்ட பெறுமதிமிக்க மாணிக்ககல்லுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மாணிக்ககல்லின் பெறுமதி இரண்டு கோடி ரூபா என, பொலிஸார் தெரிவிக்கின்றனர். பேலியகொட, மேல் மாகாண வடக்கு குற்றதடுப்பு பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, இது கைப்பற்றப்பட்டது. நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள ஹொட்டலொன்றில் விற்பனைக்காக எடுத்துவரப்பட்ட மாணிக்ககல் மற்றும் அதன் உரிமையாளர், கடத்தப்பட்டதாகவும், உரிமையாளரிடமிருந்து 50 ஆயிரம் ரூபா கொள்ளையிட்டதாகவும், நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவர் இன்றைய தினம் நீர்கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 15, 2019 13:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க