fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பண்டிகை காலத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 771 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 14, 2019 18:50

பண்டிகை காலத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 771 பேர் கைது

பண்டிகை காலத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 771 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 26 ஆயிரத்து 425 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பண்டிகை காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலை உட்பட நாட்டிலுள்ள சகல முக்கிய வீதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுமென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 14, 2019 18:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க