fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேலும் 27 வகையான மருந்துப்பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 14, 2019 15:29

மேலும் 27 வகையான மருந்துப்பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை

மேலும் 27 வகையான மருந்துப் பொருட்களின் விலையை குறைக்க சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

குறித்த மருந்துப் பொருட்களின் சந்தை விலையை மதிப்பீடு செய்யும் பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் விலை கட்டுப்பாட்டு குழு, 27 வகையான மருந்துப் பொருட்களின் விலையை ஆய்வு செய்துள்ளது. அதில் புற்றுநோய்க்கான மருந்து வகைகளும் அடங்குவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் விலை குறைக்கப்படும். இதேவேளை அரசாங்கம் இதுவரை 73 வகையான மருந்துப் பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 14, 2019 15:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க