சந்திரனிற்கு விண்கலம் அனுப்பும் முயற்சியை மீண்டும் முன்னெடுக்கவுள்ளதாக இஸ்ரேல் தெரிவிப்பு
Related Articles
சந்திரனிற்கு விண்கலம் அனுப்பும் முயற்சியை மீண்டும் முன்னெடுக்கவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் எயிரோஸ்பேஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் விண்கலமொன்று கடந்த வியாழக்கிழமை சந்திரனிற்கு அனுப்பப்பட்டது.
டெல் அவிவ் பகுதியிலிருந்து சந்திரனில் தரையிறங்கும் நோக்கில் அனுப்பப்பட்ட விண்கலம் சந்திரனை அடையும் இறுதி நேரத்தில் இயந்திர கோளாறினால் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தனியார் நன்கொடையாளர்கள் மற்றும் மக்களின் நிதி திரட்டலுக்கமைய அடுத்த விண்கலம் தயாரிக்கப்படுமென அந்நாட்டின் எயிரோஸ்பேஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.