fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதுவருடத்தை முன்னிட்டு இன்றைய தினமும் விசேட போக்குவரத்து சேவைகள்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 14, 2019 15:18

புதுவருடத்தை முன்னிட்டு இன்றைய தினமும் விசேட போக்குவரத்து சேவைகள்

புதுவருடத்தை முன்னிட்டு இன்றைய தினமும் விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன. 65 மேலதிக ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஆயிரத்து 500 மேலதிக பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும். 600 தனியார் பஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

புதுவருட பண்டிகைக்காக பெரும் எண்ணிக்கையிலானோர் சொந்த இடங்களுக்கு சென்றுள்ளனர். அவர்கள் மீண்டும் கொழும்பு உட்பட பணிபுரியும் இடங்களுக்கு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள் நடத்தப்படும்.

இதேவேளை எதிர்வரும் 22ம் திகதி வரை விசேட போக்குவரத்து சேவை இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 14, 2019 15:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க