fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசத்தின் கலாசார பெறுமதியை புத்தாண்டு பறைசாற்றுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 14, 2019 13:21

தேசத்தின் கலாசார பெறுமதியை புத்தாண்டு பறைசாற்றுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

இயற்கையையும், சூழலையும் வழிபடுவதற்கான வாய்ப்பாக சித்திரை புத்தாண்டு அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தமது தேசிய தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் புத்தாண்டு அமைந்துள்ளது. கலாசாரங்களுக்கிடையிலான வைபவமாக காணப்படும் புத்தாண்டின் ஆழமான அர்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

இயற்கையை மீறிய செயற்பாடுகள் காரணமாக தற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளன. குறித்த விடயம் தொடர்பாகவும் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 14, 2019 13:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க