fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்ற குழு கூட்டங்களில் பங்கேற்காமையினால் செல்வம் வாக்களிப்பில் இருந்து விலகியிருக்கலாம் -பா.உ. மாவை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 13, 2019 08:51

பாராளுமன்ற குழு கூட்டங்களில் பங்கேற்காமையினால் செல்வம் வாக்களிப்பில் இருந்து விலகியிருக்கலாம் -பா.உ. மாவை

பாராளுமன்ற குழு கூட்டங்களில் கலந்துகொள்ளாமையினால் செல்வம் வாக்களிப்பில் இருந்து விலகியிருக்கலாம் என தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்டகூட்டம் நேற்றயதினம் வவுனியாவில் நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களிற்கு கருத்துதெரிவித்த போதே மேற்படி தெரிவித்தார்.

மேலும்  கருத்து தெரிவித்த அவர்…

வரவுசெலவு திட்டத்திற்கு செல்வம் அடைக்கலநாதன் வாக்களிக்காமை தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து விவாதங்கள் மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம்.அவர் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து கூட்டங்களை நடாத்துவதால் சில பாராளுமன்ற குழு கூட்டங்களில் கலந்துகொள்ள தவறியிருக்கிறார். இதனால் நாம் பேசியவிடயங்கள்இ அளித்த விளக்கங்கள் அவருக்கு தெரியாமலும்இருக்ககூடும் அதற்காக அவர் மீது குற்றம் சுமத்தவிரும்பவில்லை. இதேவளை பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்தன் அந்த கூட்டங்களில் கலந்துகொண்டிருந்ததுடன் எடுத்த முடிவுகளின் படி நடந்திருக்கிறார். எனவே செல்வம் ஏன் பங்களிக்கவில்லை என்பதை நாங்களும் விசாரிக்கவேண்டும். இதேவேளை செல்வம் அடைக்கலநாதனுடன் நாம்பேச்சுவார்தையை முன்னெடுத்து இணைந்து வேலை செய்யும் இணக்கத்தை உருவாக்கதான் விரும்புகிறோம் இ அதற்காக அவர் விலகிவிட்டார் என்று அர்தம் இல்லை. அவர் தனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறார் ஒரு ஜனநாயக இயக்கத்தில் அதற்கான உரித்து அவர்களிற்கு இருக்கிறது. ஆனால் பாராளுமன்ற குழு கூட்டத்திலே எடுக்கபட்ட தீர்மானத்திற்கு மறுத்து தீர்மானம் எடுத்தமையால் அது ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக நாம் கருதி அவரோடு பேச்சுவார்த்தை நடாத்தி எதிர்காலத்தில் எவ்வாறு பயணிப்பது என தீர்மானிப்போம் என்றார்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 13, 2019 08:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க