fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பண்டிகை காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது விசேட கவனம் செலுத்துமாறு வலியுறுத்தல்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 15:09

பண்டிகை காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது விசேட கவனம் செலுத்துமாறு வலியுறுத்தல்

பண்டிகை காலத்தில் உணவுப்பொருட்கள் மற்றும் மின் உபகரண பொருட்களை கொள்வனவு செய்யும் போது விசேட கவனம் செலுத்துமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

மலிவு விற்பனை எனும் பெயரில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால் மின் உபகரண பொருட்களை கொள்வனவு செய்யும் போது உத்தரவாத சான்றிதழ் உள்ளவற்றை மாத்திரமே கொள்வனவு செய்யுமாறு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பௌசர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை நுகர்வோரை ஏமாற்றும் விதத்தில் செயல்படும் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

1977 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடுகளை பதிவு செய்யமுடியுமென அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பௌசர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 15:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க