fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்ட இறுதி நாள் இன்று

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 11:12

நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்ட இறுதி நாள் இன்று

நாட்டுக்காக ஒன்றிணைவோம் மட்டக்களப்பு மாவட்ட வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

திட்டத்தின் ஊடாக இதுவரை 646 செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திரத்திற்கும் மேற்பட்டோர் நன்மையடைந்துள்ளனர்.

கடந்த 8 ம் திகதி ஆரம்பித்த குறித்த வேலைத்திட்டம் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகள் மட்டத்தில் இடம்பெறுகிறுது. இதற்கமைய இன்றைய தினம் ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா எனும் தொழிற்பயிற்சி நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

இதனையடுத்து மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வில் ஆயிரத்து 200 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காணி உறுதிபத்திரங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 11:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo