fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சூழல் பற்றிய பொறுப்பற்ற மனநிலையால் மாறிய வானிலை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 11, 2019 10:11

சூழல் பற்றிய பொறுப்பற்ற மனநிலையால் மாறிய வானிலை

இன்றைய நாட்களில் மக்கள் எதிர் நோக்கும் முக்கியமாக இலங்கை மக்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்னையாக இந்த காலநிலை மாற்றத்தை குறிப்பிடலாம் அதிலும் அதிக உஷ்ணம் இலங்கையை வாட்டி வதைக்கிறது.

காலநிலை அறிக்கைகளின்படி மேல் வளிமண்டலத்தில் முகில்கள் இல்லாமை, இக்காலங்களில் மழை இன்மை போன்றவை காரணமாக வெப்பம அதிகரிப்பு ஏற்படுகிறது. அத்துடன் பச்சை வீட்டு விளைவு தொடர்பில் நாம் அறிந்ததே, மற்றும் உலக காலநிலை மாற்றமும் ஓர் காரணம்.

மனித உடலுக்கு உஷ்ணம் உணரப்படுவதற்கு அல்லது அதிகரிப்பதற்கு மூல காரணம் கீழ் வளி மண்டலத்தில் உள்ள நீர் ஆவியாகி மேலே செல்வதாகும். இங்கு வெப்பம் கூடுதலாக உணரப்படுவது சாதாரண நிகழ்வாகும்.

ஏப்ரல் மாதத்தில் மூன்றாம் வாரமாகின்ற போது மழை கிடைக்குமாயின் காணப்படும் உஷ்ண தன்மை குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும் தற்போது காணப்படும் உஷ்ணநிலை நாட்டின் கூடுதலான உஷ்ண நிலை எனக் கூற முடியாது. இலங்கையில் அதிக வெப்பம் கிடைக்கப் பெற்ற ஆண்டு 1982 ஆகும். அது வவுனியாவில் 40.1 செல்ஸியஸாக காணப்பட்டது.

நாம் வாழும் புவி முன்னூற்று அறுபத்தைந்து நாட்களுக்கு (365) ஒருமுறை சூரியனை சுற்றி வலம் வருகிறது. இங்கு புவி பயணிப்பது 23 பாகை சரிவாக ஆகும். ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதலாம் திகதி புவி சூரியனுக்கு அண்மிப்பதுடன் ஜனவரி மூன்றாம் திகதியாகும் போது புவி சூரியனுக்கு மிகவும் நெருக்கமாகின்றது. இந்த செயற்பாட்டின் பிரதிபலனாகத்தான் ஜனவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை இலங்கையில் அதிகமான உஷ்ணம் ஏற்படுகிறது. சூரியனுக்கு (150,000,000) பதினைந்து கோடி கிலோ மீற்றர் தூரத்திலேயே புவி அமைந்திருக்கிறது.

அத்துடன் ஒவ்வொரு வருடமும் மார்ச் இருபத்தோராம் திகதி சூரியன் மத்திய கோட்டுக்கு மேலால் பயணிக்கும். அப்படி பயணிக்கும் போது சூரியன் பயணிப்பது தெற்கு அரைக் கோளத்துக்கு சாய்வாகவாகும். இப்படி பயணிக்கும் போது அவுஸ்திரேலியாவுக்கு ஆஜன்டீனாவுக்கு, வடஅமெரிக்காவுக்கு உஷ்ண தன்மை ஏற்படுவதோடு இந்த நிலை படிப்படியாக குறைவடைந்து சூரியன் வடக்குக்கு சாய்வடைந்து பயணிக்கின்ற நேரத்திலே இந்த நாடுகளுக்கு உஷ்ண தன்மை குறைந்து குளிர்த் தன்மை ஏற்படும். தற்போது இலங்கையில் காணப்படும் காலநிலை மாற்றத்துக்கு அதிக வெப்பத்துக்கு பல காரணங்கள் தாக்கம் செலுத்துகின்றன. இந்த காலகட்டத்தில் இலங்கையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.

மக்கள் அதிக உஷ்ணத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அதற்கமைய முடிந்தளவு நீரை பருகுமாறும், நிழலான இடங்களில் வசிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதிகளவில் வியர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபடல், திறந்த வாகனங்களில் பயணித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை தவிர்ப்பது மிக முக்கியமென சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப்பெண்கள் குறித்த வெப்பமான காலநிலையின்போது விசேட கவனம் செலுத்தி செயற்படவேண்டுமென சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 11, 2019 10:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க