fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழா : ITN ஊடக வலையமைப்புக்கு பல விருதுகள்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 18:47

ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழா : ITN ஊடக வலையமைப்புக்கு பல விருதுகள்

ஊடகவியலாளர்களின் திறமைகளை வெளிக்காட்டும் வகையில் இடம்பெற்ற முதலாவது ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழாவில் ஐரீஎன் ஊடக வலையமைப்புக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் விருது வழங்கும் விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. ஊடக துறை அமைச்சு ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

அமைச்சர்களான ருவன் விஜயவர்தன, கயந்த கருணாதிலக்க, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர். பத்திரிகை, வானொலி தொலைகாட்சி இணையத்தளங்களை பிரதிநிதிதுவப்படுத்தும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழாவில் ஆண்டின் சிறந்த தமிழ் தொலைகாட்சி செய்தி வாசிப்பாளருக்கான விருது வசந்தம் தொலைகாட்சியின் இர்பான் மொஹமட்டுக்கு வழங்கப்பட்டது.

ஆண்டின் சிறந்த ஆங்கில செய்தி வாசிப்பாளருக்கான விருது பிரைம் ரிவியின் இப்தியா அப்துல் காதருக்கு வழங்கப்பட்டது. ஆண்டின் சிறந்த வானொலி நிகழ்ச்சியாக ஐரீஎன் எப்.எம். நொனிமி சாரிக்கா நிகழ்ச்சிக்காக இந்திர ஸ்ரீ சுரவீரவுக்கு வழங்கப்பட்டது.

ஆண்டின் சிறந்த தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருது வசந்தம் தொலைகாட்சியின் எம்.எஸ்.எம். முஷாரப்புக்கு வழங்கப்பட்டது. ஆண்டின் சிறந்த புலனாய்வு நிகழ்ச்சிக்காக பரிந்துரைக்கப்பட்ட மூவரும் ஐரீஎன் ஊடக வலையமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர். துஷ்யந்த தர்ஷன, இந்திக்க வீரகோன், இர்பான் மொஹமட் ஆகியோரின் பெயரகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அப்பிரிவில் இர்பான் மொஹமட்டுக்கு விருது வழங்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 18:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க