fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள வீதிகளை பாதுகாப்பதற்கென விசேட வேலைவத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 13:20

மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள வீதிகளை பாதுகாப்பதற்கென விசேட வேலைவத்திட்டம்

மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள வீதிகளை பாதுகாப்பதற்கென விசேட வேலைவத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதிகளில் கட்டுமாண பணிகளை முன்னெடுப்பதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது. அமைச்சர் கபீர் ஹாசிம் இது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

திட்டத்திற்கென 7 ஆயிரத்து 619 ஜப்பான் யென்னை, ஜப்பான் நிதியுதவியாக வழங்கியுள்ளது. தற்போது மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பல வீதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அம்பேபுஸ்ஸ, குருநாகல் – திருகோணமலை வீதியின் 10ம் மைல்கல் மற்றும் வெல்லவாய – எல்ல கும்பல்வெல வீதியின் 27வது மைல்கல் பகுதியில் மண்சரிவு ஏற்படுவதை தடுப்பதற்கு தேவையான கட்டுமான பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பெரகல – ஹாலிஎல வீதியின் 22வது மைல்கல் பகுதி, 65து மைல்கல் பகுதி மற்றும் 33வது மைல்கல் பகுதி ஆகிய பகுதிகளிலும் மண்சரிவை தடுப்பதற்கான கட்டுமாண பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஜப்பான் யென் நிதி இதற்கென பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 13:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க