fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

1070 வீடுகளுக்கு நஷ்டயீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 15:14

1070 வீடுகளுக்கு நஷ்டயீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

2016ம் ஆண்டு கொலன்னாவை பகுதியில் சேதமடைந்த 1070 வீடுகளுக்கு நஷ்டயீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய காப்புறுதி பொறுப்பு நிதியத்தினால் இந்த நஸ்டயீடுகள் வழங்கப்படவுள்ளன. இதேவேளை எவ்வித தட்டுப்பாடும் இன்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கான பிரேரணைகளுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

தொடர்ந்தும் மின்சாரத்தை விநியோகிப்பதற்காக குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால பரிந்துரைகளை முன்வைப்பதற்காக குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்தது. பிரதமரின் தலைமையில் அமைச்சர்களை உள்ளடக்கியதாக இக்குழு நியமிக்கப்படவுள்ளது. தொடர்ந்தும் மின்சாரத்தை விநியோகிப்பதற்காக 100 மெகோவோட்ஸ் மின்சாரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை ஏற்கவே அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதனை தொடர்ந்து அமைச்சரவையினால் நிமியக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் உப மின் நிலையங்கள் சிலவற்றில் இருந்து மின்சாரத்தை பெற்று கொள்வதற்காகவும் அதற்காக ஆறு மாதங்களுக்கு தேவையான நிதியை வழங்குவதற்கும் அமைச்சiவை தீர்மானித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 15:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க