fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 13:55

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

இஸ்ரேல் பொது தேர்தலின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்றை;ய தினம் இத்தேர்தல் இடம்பெற்றது. முடிவுகளின் பிரகாரம் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லையென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாகுவின் லிகுட் கட்சியும், எதிர்கட்சியின் பிரதான வேட்பாளரான பெனி டென்சின் நீலம் மற்றும் வெள்ளை முன்னணியும் தலா 35 ஆசனங்களில் வெற்றிப்பெற்றுள்ளன. இதனால் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இஸ்ரேல் பாராளுமன்றத்தின் 120 ஆசனங்களுக்காக தேர்தல் இடம்பெற்றது. 2 கட்சிகளும் தாமே வெற்றிப்பெற்றதாக கூறி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் எதிர்கட்சியே பலமடைந்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் வரலாற்றில் இதுவரை எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மையை பெற்று கொள்ள முடியவில்லை. இதனால் தற்போதைய அரசாங்கம் மீண்டும் புதிய அரசாங்கத்தை அமைக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இம்முறை இஸ்ரேல் பொது தேர்தலில் 6.3 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 47 கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 13:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo