fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மலையகத்தில் பஸ் சேவைகள் வழமை போல் இடம்பெறுகிறது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 10:56

மலையகத்தில் பஸ் சேவைகள் வழமை போல் இடம்பெறுகிறது

அகில இலங்கை தனியார் பஸ் சேவைகள் சங்கம்  பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட   தண்டப் பணத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்த தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தினால் மலையக சேவைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்
மலையகத்தின் பஸ் சேவைகள் வழமைபோலவே இன்றைய தினம் இடம்பெற்றன.
குறிப்பாக கண்டி, கொழும்பு, இரத்தினபுரி ,பலாங்கொடை உள்ளிட்ட பிரதான  பிற நகரங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களும் மலையகத்தில் உள்ள ஏனைய பிரதேசங்களுக்கும் செல்லும் தனியார் பஸ்களும்  வழமை போலவே சேவையில் ஈடுபட்டு வருவதாக தனியார் பஸ் சாரதி ஒருவர் தெரிவித்தார்.
 தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டுக்காக மக்கள் தயாராகி வரும் நிலையில் இவ்வாறான ஒரு வேலை நிறுத்த போராட்டம் இடம்பெறுவது பொருத்தமற்றது எனவும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 10:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க