மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட நாட்டுக்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் நேற்றைய தினத்தில் 192 திட்டங்கள் ஊடாக 5615 பயனாளிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி திட்டத்தின் 2ம் நாள் இன்றாகும்.
ஜனாதிபதியின் ஆலோசனையிலும் வழிகாட்டலின் கீழும் ஜனாதிபதி அலுவலகம் செய்றபடுத்துகின்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கான வறுமையை ஒழிக்கும் கிராம சக்தி, போதை பொருள் ஒழிப்பு, சிறுவர்களின் பாதுகாப்பு, தேசிய உணவு உற்பத்தி, சிறுநீரக நோய் நிவாரணம், சுற்றாடல் பாதுகாப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் இதன்கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு அமைச்சுக்கள் அமுல்படுத்தியுள்ள தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் சமூக நலன்புரி விடயங்களை செயற்திறனுடனும் உற்பத்தி திறனுடனும் அமுல்படுத்தி கிராமிய மட்டத்தில் இருந்து மாவட்ட மட்டம் வரை மக்களுக்கு உயர்ந்தபட்ச சேவைகைளயும் பிரதிலாபங்களையும் பெற்று கொடுக்கும் நோக்கில் நாட்டுக்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இன்றைய தினமும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு மேலதிகமாக பிரதேச செயலக மட்டங்களில் பொதுமக்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவும் சேவைகள் இடம்பெறுகின்றன. இதன்போது தேசிய அடையாள அட்டைகளை பெற்று கொள்வது முதல் காணி உறுதிகளை பெற்று கொள்வது வரையிலான சேவைகள் இடம்பெறுகின்றன.
ஜனாதிபதி செயலகம் அமுல்படுத்தியுள்ள, ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று கொடுக்கும் நிகழ்ச்சிகளும், நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேவைத்திட்டத்திற்கு இணைவாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.