இஸ்ரேலில் பொதுத் தேர்தல் இன்று
Related Articles
இஸ்ரேலில் பொதுத் தேர்தல் இன்று இடம்பெறுகிறது. பிரதமர் பென்ஞமின் நெத்தன்யாகுவும் தேர்தலில் போட்டியிடுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் அவருக்கு எதிராக ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
பென்ஞமின் நெத்தன்யாகுவை பிரதிநிதித்துவப்படுத்தும் லிக்குட் கட்சி கடந்த தேர்தலின் போது 30 ஆசனங்களை கைப்பற்றியது. குறித்த தேர்தலில் போட்டியிட்டு 11 ஆசனங்களை கைப்பற்றிய புளு என்ட் வைட் கட்சி இம்முறை தேர்தலில் பாரிய சவாலாக அமையுமென எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரேல் செய்திகள் தெரிவிக்கின்றன.