fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாடு கடத்தப்பட்ட மொஹமட் முபார் மொஹமட் ஜபீர் விசாரணைகளின் பின்னர் விடுதலை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2019 12:50

நாடு கடத்தப்பட்ட மொஹமட் முபார் மொஹமட் ஜபீர் விசாரணைகளின் பின்னர் விடுதலை

பாதாள உலக குழு தலைமையில் மாகந்துரே மதூஷுடன், டுபாயில் கைதுசெய்யப்பட்டு நேற்று நாடு கடத்தப்பட்ட இருவரில் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் மொஹமட் முபார் மொஹமட் ஜபீர் மற்றும் மொஹமட் நசீம் மொஹமட் பைசால் ஆகிய இருவரும் நாடு கடத்தப்பட்ட நிலையில் அதிகாலை 05.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அவர்களை பொறுப்பேற்றனர்.

பின்னர் இவர்கள் இருவரிடமும் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் மொஹமட் முபார் மொஹமட் ஜபீர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

மற்றையவரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டவர்களில் இதுவரை 15 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2019 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo