பெலியத்த முதல் ஹம்பாந்தோட்டை வரையான ரயில் வீதியின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் ஆரம்பிக்கப்படுமென ராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். 63 கிலோமீற்றர் நீளம் கொண்ட ரயில் வீதி நிர்மாணிக்கப்படவுள்ளது.
வீதியை நிர்மாணிப்பதற்கு தேவையான சாத்தியக் கூறுகள் தொடர்பான அறிக்கை ஆராயப்பட்டதன் பின்னர் இதுதொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை மாத்தறை – பெலியத்த ரயில்போக்குவரத்து சேவைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டன. பெலியத்தையிலிருந்து 7 ரயில்கள் சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.