fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 8, 2019 08:52

நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது

சப்ரகமுவ, மத்திய, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும்பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பின்னர் கிழக்கு மாகாணத்திற்கும் பரவக் கூடும்.மேல்இ சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

சூரியனின் வடதிசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (08ஆம் திகதி) ஜா எலஇ கனேமுல்லைஇ அங்குருவெல்லஇ தம்பகொல்லஇ அம்பன்போருவ மற்றும் கொட்டகொட ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 8, 2019 08:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க