fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 6, 2019 11:13

இளைஞர்களின் புதுமையான ஆற்றல்களை உலகிற்கு வெளிக்கொண்டு வரும் யூத் வித் டெலன்ட் தேர்ட் ஜெனரேஷன் மாபெரும் இறுதி போட்டிக்கென 8 போட்டியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இறுதி போட்டியானது இன்று நடைபெறவுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், ஐரீஎன் ஊடக வலையமைப்பும் இணைந்து யூத் வித் டெலன்ட் ரியாலிட்டி நிகழ்ச்சியை வழங்குகின்றன. மூன்று வருடங்களாக நாட்டில் உள்ள திறமையாளர்களை வெளிக்கொண்டு வருவதற்கு யூத் வித் டெலன்ட் நிகழ்ச்சியினால் முடிந்தது. தேர்ட் ஜெனரேஷன் மாபெரும் இறுதி போட்டிக்கு எட்டு போட்டியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர். தரிந்து ருமயந்த, இரோமி ஜயசிங்க, சம்பத் சுபசிங்க, சஹிபுல் யமீன், குஷான் ஹாஷித்த, ருவன் சாமர, ஹெனிபர் த மெஜிக் வொரியர் மற்றும் மொஹமட் ரியாத் ஆகியோரே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். யூத் வித் டெலன்ட் மாபெரும் இறுதி போட்டியை இன்று இரவு 7 மணிமுதல் நேரலையாக ஐரீஎன் ஊடாக கண்டுகளிக்க முடியும். இந்த இறுதி போட்டிக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வளாகம் தற்போது தயார்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருகோடி ரூபாவுக்கும் கூடுதலான பரிசை வெற்றியாளருக்கு வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 6, 2019 11:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo