fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெங்களூரில் வான வேடிக்கை நிகழ்த்திய ரசல்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 6, 2019 10:44

பெங்களூரில் வான வேடிக்கை நிகழ்த்திய ரசல்

நடைபெற்று வரும் ஐ.பீ.எல். தொடரின் 17ஆவது போட்டி நேற்று பெங்களூரில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வென்ற கலகட்டா நெட் ரைடர்ஸ் அணி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை முதலில் துடுப்பாட பணித்தது.அதனடிப்படையில் முதலில் துடுப்படுத்தாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.விராட் கோலி 84 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

206 எனும் சவாலான ஓட்ட எண்ணிக்கையை நோக்கி களமிறங்கிய கல்கட்டா அணி ஆரம்பம் முதல் ஓரளவு சிறப்பாக துடுப்பெடுத்தாடினாலும் கூட இறுதியில் வெற்றி வாய்ப்பு பெங்களூர் அணிக்கே என நினைத்திருந்த தருவாயில் இறுதி 3 ஓவர்களுக்கு 52 ஓட்டங்கள் தேவைப்பட்டது.6 விக்கட்டுக்கா களம் நுழைந்த அன்ரூ ரசல் யாரும் எதிர்பாராத விதமாக மைதானத்தில் வான வேடிக்கைகளை நிகழ்த்தி கல்கட்டா அணிக்கு 5 பந்துகளை மீதம் வைத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.19.1 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 206 கல்கட்டா அணி பெற்று 5 விக்கட்டுக்களினால் வெற்றியை தழுவியது.

அன்ரூ ரசல் 13 பந்துகளில் 7 சிக்சர்கள் ஒரு பௌண்டரியை விளாசி 48 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தார்.

ஆட்ட நாயகனாகவும் அவரே தெரிவானார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 6, 2019 10:44

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க