fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்றைய வானிலை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 6, 2019 10:23

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று காலை திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் ,இந்த மழை விழ்ச்சி அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் பரவக் கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 6, 2019 10:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க