துருக்கியின் திட்டத்திற்கு அமெரிக்கா கண்டனம்
Related Articles
ரஷ்யாவிமிடருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் துருக்கியின் திட்டத்திற்கு அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஜெட் விமானங்களுக்கு குறித்த ஏவுகணைகள் அச்சுறுத்தலாக அமையுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான பொறுப்பற்ற தீர்மானங்களை மேற்கொள்ளும் முன்னர், நேட்டோ அமைப்பின் முக்கிய உறுப்பினராக நீடிப்பது தொடர்பில் துருக்கி தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் எஸ் – 400 என்ற குறித்த ஏவுகணை அமைப்பினைக் கொள்வனவு செய்யும் திட்டமானது நிறைவடைந்த ஒரு திட்டமென துருக்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.