fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தடைசெய்யப்பட்ட பொலித்தீன் உறைகளை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 14:50

தடைசெய்யப்பட்ட பொலித்தீன் உறைகளை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு

தடைசெய்யப்பட்ட பொலித்தீன் உறைகளை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. பொலிசாரும் மத்திய சுற்றாடல் அதிகார சபையும் இணைந்து புறக்கோட்டை மற்றும் பிப்பில்ஸ் பார்க் பகுதிகளில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது கெசல்வத்த பகுதியில் நிறுவனமொன்றின் களஞ்சியசாலையிலிருந்து அரை தொன்னுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட பொலித்தீன் தொகை கண்டெடுக்கப்பட்டதாக விசாரணை பணிப்பாளர் என்.எஸ்.கமகே தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவின் பின்னர் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பொலித்தீன்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார். இதேவேளை சட்டவிரோத பொலித்தீன் தயாரிப்பு நிறுவனங்களை அடையாளம் காண்பதற்கென 2 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய இவ்வருத்தில் மாத்திரம் 100 க்கும் அதிகமானோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 14:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க