fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடந்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளினால் அதிக வருமானம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 13:49

கடந்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளினால் அதிக வருமானம்

இவ்வருடத்தின் கடந்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளினால் 124 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளிலிருந்ததே இவ்வருமானம் பெறப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

சட்ட விரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட தங்கம், சிகரெட், போதைப்பொருள், வெளிநாட்டு நாணயம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சுங்க திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டன. இதன்போது 41 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் சட்டவிரோதமாக அதிக பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 4, 2019 13:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க