நேற்றைய 15 ஆவது ஐ.பீ.எல். போட்டி மும்பையில் இடம்பெற்றது.இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மிக இலாவகமாக தோற்கடித்தது மும்மை இந்தியன்ஸ் அணி.நேற்று மும்பையில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி களத்தடுப்பை முதலில் தேர்வு செய்தது.அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.ஆரம்பத்திலிருந்தே ஓட்டங்களை பெறுவதில் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்ட போது இறுதி தருணங்களில் பாண்டியா மற்றும் பொலாட் ஆகியோர் விலாசிய சிக்சர்கள் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த பெரும் உதவியாக அமைந்தது.சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளை எதிர்கொண்டு 8 பௌண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கலாக 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.பாண்டியா 8 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்சர்கள் ஒரு பெண்டரி அடங்கலாக 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.இதனடிப்படையில் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றது.
171 எனும் வெற்றியிலக்கோடு களமிறங்கிய சென்னை அணி இலகுவாக வெற்றியினை சுவைத்துக்கொள்ளும் எனும் பலத்த எதிர்பார்ப்பு இருந்த போதிலும் அவ்வணியினால் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.கேதர் ஜாதவ் 58 ஓட்டங்களை பெற்றார்.லசித் மாலிங்க, பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.