fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புரூனே இராச்சியத்தில் இன்று முதல் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் கடுமையாக அமுலில்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 3, 2019 14:53

புரூனே இராச்சியத்தில் இன்று முதல் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் கடுமையாக அமுலில்

புரூனே இராச்சியத்தில் இன்று முதல் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் கடுமையாக்கப்படவுள்ளது. தென் கிழக்காசிய நாடான புரூனேயில் தளர்வான ஷரீஆ சட்டம் பின்பற்றப்படுகிறது. எனினும் குற்றச்செயல்கள் அதிகரித்ததால் ஷரீஆ சட்டத்தை முழுமையாக பின்பற்ற அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தகாத பாலியல் உறவு, ஓரினச்சேர்க்கை போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடிய விதத்தில் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. புரூனே நாட்டிலுள்ள வலதுசாரி அமைப்புக்கள் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனினும் சட்டம் இன்று முதல் அமுல்ப்படுத்தப்படுமென புரூனே அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 3, 2019 14:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க