fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட இருவரில் ஒருவர் விடுதலை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 3, 2019 12:58

மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட இருவரில் ஒருவர் விடுதலை

பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட இருவரில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர்களான மொஹமட் சியாம் மற்றும் லங்கா சஜித் பெரேரா ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மொஹமட் சியாம் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் லங்கா சஜித் பெரேராவிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மொஹமட் சியாம் விடுதலை செய்யப்பட்டபோது சியாமின் உதவியாளர்கள், ஊடகவியலாளரொருவரை தாக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 3, 2019 12:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க