fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

“சித்திரை மாத உறுதிமொழி” நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக இடம்பெற்றது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 3, 2019 09:20

“சித்திரை மாத உறுதிமொழி” நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக இடம்பெற்றது

போதையிலிருந்து விடுதலைப் பெற்ற நாட்டிற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியளிக்கும் “சித்திரை மாத உறுதிமொழி” வைபவம் இன்று ஏப்ரல் 03ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் கொழும்பு சதுக்கத்தில் இடம்பெற்றது.

காலை .08.15க்கு சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் நிகழ்வு இடம்பெற்றதுடன் , பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் சகல ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெருமளவிலானோர் பங்குபற்றினர்

நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களும் தமது பாடசாலைகளிலிருந்தவாறே சித்திரை மாத உறுதிமொழியுடன் இணைந்துகொண்டனர்.

போதைப்பொருள் அழிவிலிருந்து நாட்டை விடுதலை செய்து, சௌபாக்கியமிக்க இலங்கையை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்த தேசிய பணியை மேலும் வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கு எவ்வித பேதங்களுமின்றி அனைத்து இலங்கையர்களும் இதில் கைக்கோர்த்து கொண்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 3, 2019 09:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க