உலகிற்கு விடை கொடுத்தார் ஜேம்ஸ் பாண்ட் காதலி
Related Articles
ஜேம்ஸ் பாண்ட் ஹாலிவுட் படங்கள் என்றால் பெரிதாக அறிமுகம் தேவையில்லை. 1960களில் இருந்து உலகம் முழுவதும் பல ரசிகர்களை ஈர்த்த திரைப்படங்கள். அந்தவகையில் ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் மூன்றாவதாக வந்த படம் கோல்ட் பிங்கர். 1964ம் ஆண்டு இந்த படம் வெளியானது.
இதில் ஜேம்ஸ் பாண்ட் காதலியாக நடித்தவர் டனியா மல்லெட் நடித்திருந்தார். இவர் ஒரு மொடல் அழகி. அத்துடன் டி.வி. தொடர்களில் டனியா மல்லெட் நடித்து வந்தார். இவர் வயது முதிர்வு காரணமாக உடல் நலம்குன்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்ததாக ஜேம்ஸ் பாண்ட் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.