ஐ. நா. சபையின் சித்திரவதை தடுப்பு துணைக்குழு இன்றையதினம் இலங்கை வருகை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 16:23

ஐ. நா. சபையின் சித்திரவதை தடுப்பு துணைக்குழு இன்றையதினம் இலங்கை வருகை

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை தடுப்பு துணைக்குழு இன்றையதினம் இலங்கை வருகைதரவுள்ளது. நான்கு பேர் கொண்ட குறித்த குழு எதிர்வரும் 12ம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோல்டா, மொரிஷியஸ், சைப்ரஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நால்வர் குழுவில் உள்ளடங்குகின்றனர். விஜயத்தின்போது அவர்கள் அமைச்சர்கள், அரச உயர்மட்ட அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் அமைப்புக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 18ம் திகதி முதல் 22ம் திகதி வரை இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது சித்திரவதை தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 16:23

Default