fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துருக்கி தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 15:37

துருக்கி தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி

துருக்கியில் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் ஜனாதிபதி தையுப் எர்டோகன் தலைமையிலான ஆளுங்கட்சி வெற்றிபெற்றுள்ளது. 24 மாகாணங்களுக்குட்பட்ட 538 மாவட்டங்களிலுள்ள நகராட்சிகளில் தேர்தல் இடம்பெற்றது.

இதில் 778 நகராட்சிகளில் ஆளுங்கட்சி வெற்றிபெற்றுள்ளதாக துருக்கி ஜனாதிபதி தையூப் எர்டோகன் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் 15வது முறையாக தனது கட்சியை வெற்றிபெறச்செய்தமைக்கு பொதுமக்களுக்கு ஜனாதிபதி நன்றிகளை தெரிவித்துள்ளார். இதேவேளை தலைநகர் அங்காராவில் குடியரசு மக்கள் கட்சி வெற்றிபெற்றுள்ளமை ஜனாதிபதிக்கு பின்னடைவாக கருதப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 15:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo