fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவில் காட்டுத்தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு படையினர் 30 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 15:28

சீனாவில் காட்டுத்தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு படையினர் 30 பேர் பலி

சீனாவில் சிச்சுவான் மாநிலத்திலுள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு படையினர் 30 பேர் அதில் பலியாகியுள்ளனர். 3 ஆயிரத்து 800 மீற்றர் நிலப்பரப்பைக் கொண்ட வனத்தில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயை அணைப்பதற்கென 690 க்கும் கூடுதலான தீயணைப்பு படையினர் அங்கு அனுப்பப்பட்டனர்.

அப்பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்தனர். உயிரிழந்த தீயணைப்பு படைவீரர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் வருகை தந்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 15:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க