fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கான 5 ஆண்டு திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 13:38

ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கான 5 ஆண்டு திட்டம்

ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கான 5 ஆண்டு திட்டமொன்றை அமுல்படுத்தப்போவதாக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிங்கிரிய ஏற்றுமதி வலயத்தை அண்மித்து 12 ஆயிரம் தொழில் வாய்ப்புக்கள் உருவாகியுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது நடைபெறுகின்ற அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சின் செலவின தலைப்பு குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேபோன்று தேசிய ஒருங்கமைப்பு, தேசிய மொழிகள் மற்றும் இந்து விவகார அமைச்சின் செலவின தலைப்பு குறித்த விவாதமும் இன்று இடம்பெறவுள்ளது. கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்ட பிங்கிரிய ஏற்றுமதி வலயத்தைப் போன்று மேலும் பல ஏற்றுமதி வலயங்கள் பல பகுதிகளிலும் உருவாக்கப்படுமென அமைச்சர் மலிக் சமர விக்கிரம மேலும் தெலிவித்தார்.

திர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கும் போது ஏற்றுமதி வருமானம் அதிகரித்துளளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும் அவ்வாறான முன்னேற்றங்கள் ஏதும் அடையப்படவில்லையென தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் மலிக் சமரவிக்கிரம கடந்த ஒருசில ஆண்டுகளில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் துரிதமாக வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்தார்.

புள்ளிவிபரங்களை முன்வைத்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்காக 5 ஆண்டு திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 28 பில்லியன் அமெரிக்க டொலராக ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2019 13:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க