மஹியங்கணை பொலன்னறுவை பிரதான வீதியில் திம்புலாகல பெலேட்டியாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர். பாறங்கற்களை ஏற்றிச்சென்ற லொரியொன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
லொறியில் முன்பகுதியில் பயணித்த இருவருமே உயிரழந்ததுடன் பின்னால் இருந்த இருவரும் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் கதுருவெல பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.