fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இராணுவத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 15:05

இராணுவத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு

வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் குவைடோ அந்நாட்டு இராணுவத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளார். அரசாங்கத்தை மாற்றும் முயற்சிகளுக்கு இராணுவத்தின் படை பலம் தேவைப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கலஸ் மடுரோவுக்கு இராணுவ பிரதிநிதிகள் பலர் தொடர்ந்தும் விஸ்வாசத்துடன் செயற்படுகின்றனர். எனினும் நாட்டு மக்களின் நலன்கருதி இராணுவம் எதிர்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

எதிர்கட்சி தலைவர் அந்நாட்டில் 90 வீதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அத்துடன் அமெரிக்கா உட்பட வெளிநாடுகளும் ஜுவான் குவைடோவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. வெ

னிசுலா அரசாங்கத்திற்கு எதிராக எதிர்கட்சி தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்கும் வகையில் பல்வேறு வழிகளிலும் எதிர்க்கட்சி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 15:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க