fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொரள்ளை OIC மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நபருக்கு பிணை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 14:53

பொரள்ளை OIC மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நபருக்கு பிணை

பொரள்ளை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியின் மரணத்துடன் தொடர்புடையதாக இதுவரை விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த டிப்பெண்டர் வாகனத்தின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளில் அவரை விடுவிப்பதாக கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது.

இதன்போது கொழும்பு போக்குவரத்து பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் ச்சந்தன கொடித்துவக்கு நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கினார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 8 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் உயர்குற்றச்சாட்டு வழக்கை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ச்சந்தன கொடித்துவக்கு நீதிமன்றில் தெரிவித்தார். இதற்கமைய குறித்த வழக்கு எதிர்வரும் 22 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 14:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க