fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உணவு விற்பனை தொடர்பில் இன்று முதல் புதிய சட்டம் அமுலுக்கு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 12:56

உணவு விற்பனை தொடர்பில் இன்று முதல் புதிய சட்டம் அமுலுக்கு

உணவுப்பொருட்களின் விற்பனை தொடர்பில் இன்று முதல் புதிய சட்டமொன்று அமுலுக்கு வந்துள்ளது. உணவுப்பொருட்களை கைகளால் தொட்டு விநியோகிப்பதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களை நேரடியாக கைகளால் தொட்டு விநியோகித்தல் மற்றும் பரிமாறல் செயற்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தை மீறும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை ஊழியர்கள், உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய உணவகங்களில் கையுறைகள் அல்லது உணவுகளை விநியோகிப்பதற்கான உபகரணங்களை பயன்படுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறையை சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவு அமுல்படுத்தியுள்ளது. சுகாதாரமான கையுறைகள் மற்றும் உபகரணங்கள் உணவு விநியோகத்திற்கென பயன்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 1, 2019 12:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க